Monday 9 December 2013

புயல்

உங்களுக்கு தெரியுமா?
*அதிகப்படியான வெப்பத்தினால் கடல்நீர் ஆவியாக மாறி மேல் நோக்கிச் சென்று குளிர்ச்சி அடைந்து மேகமாக மாறுகிறது.
* அதுபோல் வெப்பத்தினால் கடலின் மேல் பகுதியில் உள்ள காற்றும் லேசாகி மேல்நோக்கிச் செல்கிறது.
அப்பொழுது காற்றின் வேகம் அதிகமாக இருந்தாலோ, அதிகப்படியான காற்று உள்ளிழுக்கப்பட்டாலோ வானில் ஒரு சுழற்சி ஏற்படுகிறது.
* இந்த சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆகும். இது மேலும் வலுவடைந்தால் புயலாக மாறும்.
* இந்த சுழற்சியின் நடுப்பகுதியை புயலின் கண் என்று கூறுவார்கள். இந்த கண்பகுதியைச் சுற்றி உள்ள காற்று வேகமாக சக்கரம்போல் சுழலும்.
* இப்படிச் சுற்றும் காற்றின் வேகம் மணிக்கு 74 கி.மீ. தாண்டினால் அது வலுப்பெற்ற புயல் ஆகும். வேகம் குறைவாக இருந்தால் காற்றழுத்த தாழ்வு நிலை.
*வேகமாக சக்கரமாகச் சுழலும்போது அப்படியே நகரத் தொடங்கும். இது கடலில் சற்று வெப்பமான பகுதியை அடைந்தால் அல்லது நிலப்பகுதியை நெருங்கும்பொழுது ஏற்படும் மாற்றங்களால் மேகம் மழையாகப் பெய்கிறது. காற்று சூறாவளியாக வீசுகிறது.
* புயலின் வேகம் 6 நிலைகளில் கணக்கிடப்படுகிறது.
முதல் நிலையில் காற்றின் வேகம் மணிக்கு 51 கி.மீ. இதனால் பெரிய சேதம் ஏற்படாது.
இரண்டாம் நிலை 61 கி.மீ.,
மூன்றாம் நிலை 87 கி.மீ.,
நான்காம் நிலை 117 கி.மீ.,
ஐந்தாம் நிலை 221 கி.மீ.,
ஆறாம் நிலை என்பது மணிக்கு - 250 கி.மீ. ஆகும்.
* காற்றின் வேகத்தையும், மேகத்தின் விஸ்தீரணத்தை அதாவது மொத்த பரப்பளவைப் பொறுத்து அதன் பலமும், அதனால் ஏற்படும் சேதமும் இருக்கு....